"அகிலன்" என் கல்யாண கிருஷ்ணன் எழுதி இயக்கிய ஒரு அதிரடி திரைப்படமாகும். இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, மதுசூதன் ராவ் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். இந்த படத்தை சுந்தர் ஆறுமுகம் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் தங்களது ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் பேனர் மூலம் தயாரித்துள்ளனர்.
திரைவிமர்சனம்
துறைமுகத்தில் நடக்கும் அனைத்து சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கும் ஆணிவேர் அகிலன். இந்த அனைத்து கடத்தல் பேரங்களுக்கும் கபூர் தான் தலைவன். அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவரை நாடு கடத்தும் பணி அகிலனுக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையில், நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் அகிலனின் ஆட்டத்தை நிறுத்த நினைக்கிறார், பலவித வியூகங்களை வகுத்து அவரை கைது செய்ய முயற்சிக்கிறார். இறுதியாக அகிலன் வேலையை முடித்தாரா? இல்லையா? அதன் பின்னணியில் அவரது மாஸ்டர் பிளான் என்ன? என்பது தான் கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில், படத்தின் லொகேஷன்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு துறைமுகம், கடல், கப்பல், முழு கடற்கரை மற்றும் அதைச் சார்ந்த இடங்களைப் பார்ப்பது புது அனுபவமாக இருக்கலாம்.
பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு பிறகு ஜெயம்ரவி அகிலனாக ஸ்கோர் செய்துள்ளார். அவரது அசைக்க முடியாத நடிப்பு அற்புதமாக இருக்கிறது. மேலும் அவர் கேரக்டரில் மூழ்கி நடித்துள்ளார்.
படத்தில் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு விவரங்கள் உள்ளன. எனவே கதை என்னவாக இருக்கும் என்பதை நம்மால் உடனடியாக கணிக்க முடிந்தாலும், படத்தின் திரைக்கதை சில திருப்பங்களுடன் நம்மை முழு ஈடுபாட்டுடன் படத்தை பார்க்க வைக்கும். சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை பயமுறுத்தும் வகையில் கதையுடன் ஒன்றியமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் பெரிய பலவீனங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு டூயட் அல்லது ரொமான்ஸை எதிர்பார்த்தால், நீங்கள் நிச்சயமாக ஏமாற்றமடைவீர்கள். அதனால்தான் பிரியா பவனின்சங்கருக்கு இந்த படத்தில் அதிக வேலை இல்லை. ப்ரியா பவானியின் கதாபாத்திரத்தை விட தன்யா ராஜேந்திரனின் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளது. மேலும் குறைந்த நேரம் காட்சியளித்தாளும் அவரது கதாபாத்திரம் திரையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
மொத்தத்தில், இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக "அகிலன்" ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments