வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு நாள் மீண்டும் மீண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்ப நடந்தால் மனநிலை எப்படி இருக்கும்? இந்த உலகத்தை எப்படி புரிந்து கொள்வது? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் டைம் லூப் என்ற கான்செப்டுடன் இந்த மாநாடு படம் உருவாகியுள்ளது.
துபாயில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அடைகிறார் கதையின் கதாநாயகன் சிம்பு. மனதில் ஏற்படும் புதிய பிம்பங்கள் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே அறியும் அந்த ஆற்றல் அனைத்தையும் புரிந்து கொண்டு தன்னுடன் இருக்கும் பிரேம்ஜி மற்றும் நலம் விரும்பிகளிடம் இதை பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக நவம்பர் 10 என்ற தேதியில் நடக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய மாநாடு அதில் நடக்கும் அசம்பாவிதங்கள் முன்கூட்டியே ஒரு ட்ரெய்லர் போல கண் முன்னே வந்து கதாநாயகனுக்கு தெரிந்துவிடுகிறது . அந்த சம்பவங்களை எப்படி மாற்றி அமைப்பது எப்படி தடுப்பது சூழ்நிலையை புரிந்து ஒரு சராசரியான நிலைக்கு அனைவரையும் எப்படி கொண்டு வருவது என்பது தான் மீதி கதை.
இந்தப் படத்திற்கு பக்கபலமாக இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால் எஸ் ஜே சூர்யா என்றுதான் சொல்லியாக வேண்டும்.கல்யாணி பிரியதர்ஷன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் யுவன் என்பது தான் குறிப்பிடத்தக்கது.
மாநாடு படம் குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு ஜாலி என்டர்டைன்மென்ட் படமாகத்தான் இருக்கிறது.
0 Comments