Gatta Kusthi Movie Review

செல்ல அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ‘கட்டா குஸ்தி’. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவிதேஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மல்யுத்த லட்சியங்களைக் கொண்ட நாயகி, குடும்பப் பொறுப்புகளைத் தாங்கி வருங்கால மனைவி தன்னை விடக் குறைவாகப் படித்திருக்க வேண்டும் என்று காத்திருக்கும் நாயகன்,  இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கிறது என்பதுதான் ‘கட்டா குஸ்தி’ படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி முழுவதும் பக்கா பொழுதுபோக்கு காட்சி நிறைந்த நகைச்சுவையுடன் இருக்கிறது. இரண்டாம் பாதி உணர்ச்சிகரமான காட்சிகளுடன் இருக்கிறது. செல்ல அய்யாவு ஆண் பெண் உறவுகளில் பெண்களின் முக்கியத்துவம், பெண்கள் அனுபவிக்கும் வலிகள், அவர்களின் சுதந்திரம் போன்றவற்றை புதுவிதமான பாணியில் கதையாக சித்தரித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பிலும், ஐஸ்வர்யா லஷ்மி அதிரடியிலும் இந்த திரைப்படம் மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ‘மத நாடாளில், போட்டியில் வெற்றி பெற எதிரிகளுடன் போரிட வேண்டும். ‘இங்க அதான் ஃபர்ஸ்ட்ல நம்ம குடும்பத்தோட சண்ட போடணும்’ போன்ற அட்டகாசமான டயலாக்குகள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக ‘கட்டா குஸ்தி’ உள்ளது.

Post a Comment

0 Comments