இயக்குநர்: ஜேம்ஸ் கேமரூன்
இசை: சைமன் ஃபிராங்க்ளன்
நடிகர்கள்: சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டானா, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர்
கதைச்சுருக்கம்:
பாண்டோரா காடுகளில் ஜேக் சல்லி நாவி இன தலைவராக தனது மக்களோடும் குடும்பத்தினரோடும் அமைதியான வாழ்க்கையை நடத்திவருகின்றார். இந்த அமைதி பல நாள் நீடிக்கவில்லை. முதல் பகுதியில் வில்லனாக வந்த குவாட்ரிச் இந்த இரண்டாம் பகுதியில் தனது நினைவுகளைக் கொண்டு அவதாராக உருவெடுக்கிறார். பின்னர் அவர் ஜேக் சல்லியை பலிவாங்கும் நோக்கத்தோடு போர்த்தொடுக்க தனது குடும்பத்தினரையும் நாவி மக்களையும் காப்பாற்ற அவர் காட்டை விட்டுச் செல்கிறார். கடல்வாழ் இனமாக மெட்கைனாவுடன் இணைந்து வாழ்கிறார். அங்கும் குவாட்ரிச் ஜேக்கை அழிக்க படையோடு வருகிறார். அவரிடமிருந்து ஜேக் எப்படி தனது குடும்பத்தை காப்பாற்றினார்? அந்த போரில் வென்றது யார்? என்பதே மீதிக்கதை.
திரைவிமர்சனம்
அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் முதல் பாதியில் ஜேக் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளோடும் நாவி இன மக்களோடும் அமைதியான வாழ்க்கையை நடத்தும் வேலையில் முதல் பாகத்தில் வந்த வில்லன் குவாட்ரிச் தன்னை கொன்றதற்கு பலிவாங்க ஜேக்கை வெறிகொண்டு தேடுகிறார். மேலும் அவர் இந்த பாகத்தில் அவதாராக மாறி இந்த வேலையைச் செய்கிறார். ஜேக்கையும் அவரது குடும்பத்தையும் கொல்ல முனைப்போடு இருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட ஜேக் நாவி இன மக்களை விட்டும் காட்டை விட்டும் தனது குடுபத்தோடு விலகினார். அவர் மெட்கைனா இன கடல்வாழ் மக்களிடம் தஞ்சமடைந்தார். அங்கு அவர்கள் கடலில் வாழும் முறையை பயின்றனர். ஜேக்கின் இரண்டு மகன்களும் தையிரியமானவர்கள். மூத்தவன் பொறுப்பாக தந்தை சொல்லைக் கேட்டு நடுந்துகொண்டான். இப்படி முதல் பகுதியில் குடும்பத்தை பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் அழகாக சித்தரித்துள்ளார் இயக்குநர். இரண்டாவது மகன் தனது திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறான். அதனால் பிரச்சனைகள் வருகின்றனர். அதனால் அவன் தன்னை அனைவரும் வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறான். இரண்டாம் பாதியில் அவன் உயிரை ஒரு துல்கன் காப்பாற்றியது. அவன் அதனோடு நட்பு கொள்கிறான். பின்னர் அதற்கு நடந்த அநிதிகளை அனைவருக்கும் எடுத்துரைத்து அதற்கு உதவ முற்படுகிறான். பின்னர் மனிதர்கள் துல்கன்களை கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து அவன் அந்த துல்கனை தனது சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களோடு காப்பாற்றும் வேலையில் இராணுவ தலைவன் குவாட்ரிசிடம் சிக்கிக் கொண்டான். தனது குழந்தைகளையும் துல்கன்களையும் காப்பாற்ற மெட்கைனா மக்கள் போர் தொடுக்கிறார்கள். இறுதியில் ஜேக் வில்லனான குவாட்ரிச்சை கொன்றானா? இல்லையா? மெட்கைனா மக்கள் அந்த போரில் வென்றார்களா? இல்லையா? என்பது தான் கதை. இந்த பாதியில் போரின் காட்சிகளையும் துல்கனுக்கும் அவதார்களுக்கும் இடையேயான பாசப்பினைப்பையும் அழகாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
இந்த திரைப்படம் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் தனது மாயாஜால வித்தையை ஒட்டுமொத்தமாக காட்டியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இந்த திரைப்படத்தின் காட்சிகளை மிக அழகாகவும் வண்ண மையமாகவும் சித்தரித்துள்ளார். இந்தக் காட்சிகளின் மூலம் அவர் நம்மை முழுவதுமாக ஈர்த்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

0 Comments