கலகத் தலைவன் இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி இயக்கிய தமிழ் ஆக்ஷன்-த்ரில்லர் வகைத் திரைப்படமாகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரேல்லி ஆகியோர் இசையமைத்துள்ளனர், கே. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
கதை
திருமாறன் (உதயநிதி) ஒரு நிதி ஆய்வாளராக கார்ப்பரேட்டில் பணியாற்றுகிறார். ஒரு கொடூரமான கொலையாளி (ஆரவ்) தலைமையிலான ஒரு மர்மமான குழு விரைவில் அவனது உலகத்தை தலைகீழாக மாற்றியது. திருமாறன் சூழ்நிலையை கையாளும் விதத்தை சுற்றியே மீதிக்கதை சுழல்கிறது.
திரைவிமர்சனம்
கலகத் தலைவன் திரைப்படத்தின் முதல் பாதி சுவரஸ்யமாகவுள்ளது. மேலும் காதல் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருந்தாலும் இது கதைக்கு தேவையா என்ற எண்ணம் எழவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இடைவேளை காட்சிகள் பயங்கரமாகவுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் ஆரவ் வில்லானாக மிரட்டிருக்கிறார். கதை புதிதாக உள்ளது. இத்திரைப்படம் உதயநிதியின் படங்களில் சிறப்பாக அமையவும் வாய்ப்புள்ளது. அவரது நண்பராக வரும் கலையரசனின் நடிப்பும் நன்றாக கதாபாத்திரத்தை எடுத்துச் செல்கிறது. மேலும் இது அருமையான கிரைம் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும்

0 Comments