மார்வல் படங்களுக்கு உலகம் முழுவதும் எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, அதுவும் குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் மார்வல் படங்களுக்கான ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே உள்ளனர்.
ஓடிடி தளங்களில் படையெடுப்புகளுக்கு பின்பு இந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து இருந்தது, அதனை தொடர்ந்து தற்போது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வெளியாகியுள்ளது.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் படம் எடுக்கப்பட்டு உள்ளது. டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரத்தில் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் எலிசபெத் ஓல்சன், சோஷிட்லா கோம்ஸ் போன்றோர் நடித்துள்ளனர். ஸ்பைடர்மேன் படங்களை எடுத்த சாம் ரைமி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
வாண்டா தனது கனவில் வரும் இரண்டு குழந்தைகளுடன் வாழ ஆசைப்படுகிறார். இதனால் அவர்கள் வாழும் மற்றொரு உலகத்திற்கு சென்று அவர்களுடன் இருக்க விரும்புகிறார். அமெரிக்கா சாவேஸிடம் உள்ள சக்திகளை பெற்று மெல்டிவேர்சை ஓபன் செய்து அங்கு செல்ல விரும்புகிறார். இதனால் அவரை தேடி செல்கிறார் வாண்டா. சாவேஸை தேடும் வாண்டாவிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற முயல்கிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்.
மார்வெல் படங்களில் உள்ளது போலவே இந்த படத்திலும் கிராபிக்ஸ் அல்டிமேட் ஆக உள்ளது. முந்தைய மார்வல் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் காமெடி, சென்டிமென்ட், டிராமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுத்துள்ளனர். மல்டிவேர்ஸை முழுவதுமாக வைத்து வந்துள்ள இந்த திரைப்படம் அடுத்தடுத்த மார்வல் படங்களுக்கு அடித்தளமாக உள்ளது. இரண்டாம் பாதியில் இசையை வைத்து வரும் சண்டை காட்சி, வித்தியாசமாக மற்றும் புதிதாக இருந்தது. மேலும் படம் முழுக்க வசனங்களும் படு சூப்பராக இருந்தது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் 3d காண பெரிய முக்கியத்துவமும் இடம்பெறவில்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே 3டியில் நன்றாக இருந்தது.
மேலும் படத்தில் வாண்டா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் எந்த ஒரு marvel படத்தில் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.




0 Comments