TAANAKKARAN(TAMIL) MOVIE REVIEW

விக்ரம் பிரபு நடிக்கும் டாணாக்காரன் திரைப்படம் இன்று  டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி டிஜிட்டல் பிரீமியர் திரையிடப்படப்பட்டுள்ளது .

அசுரன் மற்றும் ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம்  இயக்குனராக அறிமுகமான தமிழின் டாணாக்காரன் படம் . போலீஸ் பயிற்சி முகாமில் இளம் தலைமுறை சந்திக்கும் இன்னல்களைப் பற்றிய படம். முன்னாள் போலீஸ் அதிகாரியான இயக்குனர், நிஜ வாழ்க்கை அனுபவங்களை எடுத்து திரைக்கதை அமைத்துள்ளார்.

நாயகன் விக்ரம் பிரபுவின் தந்தை லிவிங்ஸ்டன் போலீசாரால் பாதிக்கப்படுகிறார். இதனால் தனது மகனான விக்ரம் பிரபுவிடம் நீ போலீசாக வேண்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக போலீஸ் வேலைக்கு செல்கிறார்.

               


போலீஸ் பயிற்சியில் விக்ரம் பிரபுவுக்கும் பயிற்சியாளர் லாலுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் விக்ரம் பிரபு போலீஸ் ஆக கூடாது என்று லால் தொந்தரவு கொடுக்கிறார்.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விக்ரம் பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்திற்காக திறமையாக உழைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.



ஈஸ்வரமூர்த்தி என்ற காவல்துறை பயிற்சி அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் .லால், பல இடங்களில் சாதாரணமாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்க்கிறார். நாயகியாக வரும் அஞ்சலி நாயருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்து இருக்கிறார். லிவிங்ஸ்டன், லிங்கேஷ், பவல் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள். 

                               


               

காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தமிழ். முதல் பாதி முழுக்க பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களையும், இரண்டாம் பாதி முழுக்க ஹீரோ, வில்லன் பாணியில் உருவாக்கியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் வரும் அனிமேஷன் காட்சிகள் மற்றும் அதை சொன்ன விதம் அருமையாக உள்ளது.

படம் முழுக்க மைதானம் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அதை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

Post a Comment

0 Comments