நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்திலேயே அதீரா மற்றும் பிரதமர் ராமிகா சென் கதாபாத்திரங்களுக்கு லீடு கொடுத்திருந்த நிலையில், அந்த இருவரும் ராக்கி பாயை காலி செய்ய போராடும் முயற்சிகள் வென்றதா? இல்லையா? என்பது தான் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் கதை.
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
கேஜிஎஃப் சாப்டர் 1ல் வில்லன் கருடா என்ட்ரி தாமதமாகத்தான் காட்டப்படும். ஆரம்பத்தில் இருந்தே ராக்கி பாயின் பேக்ரவுண்ட் பில்டப்புக்காக அதிக காட்சிகளை செலவு செய்திருப்பார்கள். இடைவேளை நேரத்தில் சிலையை திறந்து விட்டு வில்லன் கொடுக்கும் என்ட்ரி அசத்தலாக இருந்திருக்கும். ஆனால், இரண்டாம் பாகத்தில் கருடா இறந்த செய்தி அறிந்ததுமே மீண்டும் கேஜிஎஃப்பை அடைய வேண்டும் என்றும் ராக்கி பாயை துவம்சம் செய்ய வேண்டும் என்றும் அதீரா வரும் காட்சிகள் மிரட்டல். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சரியான என்ட்ரி சீன் கொடுத்துள்ளனர்.
மீண்டும் ராக்கி பாய் உயிர்ப்புடன் வரும் காட்சி தியேட்டரில் செம விசில் பறக்குது. கடைசியில் ராக்கி அதீராவை வதம் செய்தாரா? அல்லது ராமிகா சென் ராக்கியை என்ன செய்தார்? இருவரிடம் இருந்தும் ராக்கி பாய் தப்பித்தாரா? என்பது தான் மீதிக் கதை.
3ம் பாகத்தில் மீண்டும் ராக்கி பாயின் ஆட்டம் எப்படி தொடரப் போகிறது. எத்தனை பேர் அவருக்கு எதிரிகளாக வரப் போகிறார்கள், இன்னும் எத்தனை பாகம் இந்த படம் இருக்கும் என்பது இயக்குநர் பிரசாந்த் நீல்-க்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில் கேஜிஎஃப் சாப்டர் 2 தியேட்டரில் மிஸ் பண்ணக் கூடாத படம்!


0 Comments