விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்” இன்று வெளியானது.
நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
ரெம்போவாக வரும் விஜய் சேதுபதியை காதலிக்கும் கண்மணியாக நயன்தாராவும், க்திஜாவாகவும் சமந்தாவும் நடித்துள்ளனர்.
நாயகன் விஜய் சேதுபதி, ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா காம்பினேஷன் சீன்களில் மூன்று பேருமே போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.
இரண்டு காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு காதல் வைத்து பார்ப்பவர்களை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். காமெடி காட்சிகள் ஆங்காங்கே கைகொடுத்து இருக்கிறது.
படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். ஶ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
படத்தின் கான்செப்ட் புதுமையாக இருப்பதாகவும், கலகலப்பான திரைப்படமாக இருப்பதாக ரசிகர்க கூறுகின்றனர்.




0 Comments