இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் இசையமைப்பாளர் அமித் திரிவேடி இசையமைத்துள்ளார்.
'கைரேகை கலையின் ஐன்ஸ்டீன்' விக்ரமாதித்யா அலைஸ் ஆதித்யா (பிரபாஸ்), இந்தியாவின் விவிஐபிகளுக்கு எதிர்காலத்தை கணித்து சொல்லும் கைரேகை இல்லை பால்மிஸ்ட். காதல் ரேகை இல்லாததால் கல்யாணமே நடக்காது என தனக்கு தானே கணித்துக்கொண்ட ஆதித்யா, நாயகி பிரேரனாவை (பூஜா ஹெக்டே) சந்தித்த பின்பு அவரின் வாழ்வில் அனைத்தும் மாறுகிறது. காதல் வயப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களுக்கு சில சிக்கல்களை கொடுக்கிறது. இதிலிருந்து மீண்டும் இருவரின் காதலும் கரைசேர்ந்ததா, இல்லையா என்பதே 'ராதே ஷ்யாம்' படத்தின் கதை.
பிரேரனாவாக பூஜா ஹெக்டே படத்தின் இன்னொரு பலம். காதல் படம் என்கிறதாலோ என்னவோ, எக்ஸ்ட்ரா பியூட்டியாக படம் முழுக்க தனது அழகால் பார்வையாளர்களை வசீகரிக்கிறார். அதே வசீகரம் அவரின் நடிப்பிலும் மிளிர்கிறது.
ஆதித்யாவின் குருநாதர் பரமஹம்சராக சத்யராஜ், பிரேர்னாவின் பெரியப்பாவாக சச்சின் கெடேகர், கப்பல் கேப்டனாக ஜெயராம் மற்றும் ஜெகபதி பாபு, சத்யன் உள்ளிட்ட லிமிடெட் கேரக்டர்கள் மட்டுமே உள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலம் விஷுவல்தான். மனோஜ் பரமஹம்சாவின் சினிமோட்டோகிராபி படத்தை வேறு தரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
0 Comments