இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள் அதை கடத்துகிறார்கள்.
இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித். ஒருநாள், மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அஜித். அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் அஜித்.
இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதையாகும். ஏசிபி அர்ஜுன் ரோலில் அஜித் நடித்துள்ளார். அஜித்துக்கு துணையாக போலீஸ் அதிகாரியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். பைக் ஆக்சன் காட்சியில் அஜித் மிரள வைத்திருக்கிறார். அம்மா சென்ட்டிமென்ட், அண்ணன் – தம்பி பாச போராட்டம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை கொடுத்து ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் இயக்குனர் வினோத்.
இந்த படம் முழுக்க பைக் ரேஸ் சாகசங்கள், ஹாலிவுட் தரத்திலான சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. பைக் சாகசங்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. படம் பார்க்கும் அனைவருக்கும் ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
0 Comments