SAAYAM (TAMIL) MOVIE REVIEW


ஆண்டனி சாமி இயக்கம் மற்றும் தயாரிப்பில் அபி சரவணன், பொன்வண்ணன் இளவரசன் என பலரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் "சாயம் ". பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அவற்றையெல்லாம் தாண்டி இந்த படம்  வெளியாகியுள்ளது.

ஒரு சாதாரண பிரச்சனையை ஜாதி வெறியர்கள் எப்படி அதனை ஜாதிப் பிரச்சனையாக மாற்றுகிறார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

ஊர் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், மனைவி சீதா மற்றும் மகன் அபி சரவணனுடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் அபி சரவணன் சாதி வேறுபாடில்லாமல் நண்பர்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இவருடைய அத்தை மகள் ஷைனி, அபி சரவணனை காதலித்து வருகிறார். ஆனால் அவரோ பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அபி சரவணன், ஷைனி இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள் அபி சரவணன், தனது நண்பருடன் ஷைனி பேசுவதை தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் பிரச்சனை வர, அபி சரவணன் தனது நண்பரை கொன்றுவிடுகிறார்.

ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஆண்டனி இந்த கொலையை சாதிப் பிரச்சனையாக மாற்றுகிறார். ஜெயிலில் இருக்கும் அபி சரவணனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. இறுதியில் கொலை செய்ய வரும் கும்பலிடமிருந்து அபி சரவணன் தப்பித்தாரா? சாதி பிரச்சனை தீர்ந்ததா? ஜெயிலில் இருந்து அபி சரவணன் வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை ஆகும்.

Post a Comment

0 Comments