PANDRIKKU NANDRI SOLLI (TAMIL) MOVIE REVIEW


நடிகர் நிஷாந்த் ரூஸோ லீட் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் பன்றிக்கு நன்றி சொல்லி. வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கிய இந்தப் படத்தின் இந்த தலைப்பிற்காகவே ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா படத்தை வெளியிட்டார்.

பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம் சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நிஷாந்த் ரூஸோ நாயகனாக நடித்திருந்தார்.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு கதை எழுதி வைத்து தயாரிப்பாளரை தேடி வருகிறார் கதாநாயகன். இவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் கதையை தனக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்கும்படி கேட்கிறார். இதனை ஒப்புக்கொள்ளாத கதாநாயகன் வேறு தயாரிப்பாளரை தேடி நகர்கிறார்.

இதற்கிடையில் 1000 ஆண்டுகள் பழமையான பல கோடி மதிப்பு கொண்ட பஞ்சலோக பன்றி வடிவ சிலையை கடத்துவதற்காக ஒரு ரவுடி கும்பல் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் அந்த சிலையை தேடுகிறார்கள். இந்த கும்பலிடம் கதாநாயகன் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் இந்த கும்பலில் இருந்து நாயகன் தப்பித்தாரா, சிலை கிடைத்ததா, என்பதே படத்தின் மீதி கதை ஆகும்.

தற்போது சர்வைவல் ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒன்றில் தான் நடித்து வருவதாகவும், அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் ஜானரில் யார்க்கர் என்ற படத்திலும் நடித்து வருவதாகவும் ரூஸோ குறிப்பிட்டுள்ளார். பன்றிக்கு நன்றி சொல்லி படம் தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments