பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் பீம்லா நாயக். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரிக்கும் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடக்கும் ஈகோ க்ளாஷ்தான் படம். திரைக்கதையில் மிரட்டி, சூப்பர் ஹிட்டாக்கியிருப்பார், இயக்குநர் சச்சி. கிரிமினல் வழக்கறிஞராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில் இதன் திரைக்கதையும் ஒவ்வொரு காட்சிகளும் நச் என்று அமைத்திருப்பார்.
இப்படத்தில் பவன் கல்யாண் மனைவியாக நித்யா மேனன், ராணா மனைவியாக சம்யுக்தா மேனன், ராணா அப்பாவாக சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை நவீன் நூலி எடிட்டர் செய்துள்ளார்.
இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத, சாகர் சந்திரா இயக்கியிருக்கிறார். முதல் பாதி முழுக்க 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் வரும் காட்சிகள் அப்படியே இருக்கிறது. இரண்டாம் பாதி முழுக்கவே மாற்றியிருக்கிறார்கள். தெலுங்கு சினிமா இரண்டு ரகம். ஒன்று மாஸ் ; மற்றொன்று சென்டிமென்ட். க்ளைமேக்ஸில் சென்டிமென்ட்தான் ஜெயிக்கிறது.
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல மலையாளத்தில் நல்ல திரைக்கதையுடன் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்கான பீம்லா நாயக் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments