AGP (TAMIL) MOVIE REVIEW


நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிக ரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார். அவ்வகையில்  கதையும், பாத்திரமும் கவர்ந்து அவர் நடித்திருக்கும் படம்தான் ‘ஏஜிபி’.

இந்தப் படத்தில் லட்சுமி மேனன், ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ்.ஆர். ஸ்டுடியோவின் சார்பில் தயாரிப்பாளர் கே.எஸ்.ஆர். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு  செய்துள்ளார் மற்றும்  ஜெய் கிரிஷ் இசை அமைத்துள்ளார். ரமேஷ் சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகியுள்ளார்.

லட்சுமி மேனன் ஸ்கிசோஃப்ரினியா என்கிற ஒரு மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதவாது தனக்கு நடக்கும் சம்பவங்கள் உண்மையா அல்லது கற்பனையா என புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அங்கிருக்கும் நோயாளிகள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதே மருத்துவமனைக்கு லட்சுமி மேனன் தனது ஆண் நபருடன் வருகிறார். திடீரென அந்த ஆண் நண்பர் காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் லட்சுமி மேனன் ஈடுபடுகிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை ஆகும்.


Post a Comment

0 Comments