நாய் சேகர் படத்தை இயக்குனர் கிஷோர் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அஜீஷும் மற்றும் அனிருத் இசை அமைத்துள்ளனர். பிரவீன் பாலு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் சதீஸ்.
படத்தில் ஆராய்ச்சியாளராக ஜார்ஜ் மரியம் நடித்திருக்கிறார். இவர் விலங்குகளை
வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் சதீஷ்
குடியிருக்கிறார். சதீஷ் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
மேலும், ஜார்ஜ் மரியான் ஒரு நாய் வளர்த்து வருகிறார்.
ஒரு நாள் ஜார்ஜ் மரியான் வளர்த்து வந்த நாய் சதீசை கடித்து விடுகிறது.
இதிலிருந்து சதீஸின் குணங்களெல்லாம் நாயின் குணாதிசயத்தோடு
ஒத்து போகிறது. பின் சதீஸ் நாயை போலவே செய்து வருகிறார். இதனால்
சதீஸின் வாழ்க்கையில் பிரச்சனைகளும், மாற்றங்களும் ஏற்படுகிறது.
நாயை போல் சதீஸ் மாறுகிறார் சதீஸை கடித்த நாய் மனிதனை போல் நடந்து
கொள்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் எதார்த்தமான
நிகழ்வுகளை காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
உடனே இந்த பிரச்சனைக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கிறார்கள். இந்த
நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா?
சதீஷ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் கதையாகும்.
0 Comments