நடிகர் சசிக்குமார் , மடோனா செபாஸ்டியன், அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பெரிய மனிதராக ஊர் போற்றும் நபராக வாழ்ந்து வருகிறார் இயக்குனர் மகேந்திரன். இவரின் ஒரே மகன் சசிக்குமார். இவருக்கு ஐந்து நண்பர்கள். சிறுவயதிலிருந்தே சாதி, மத வேறுபாடின்றி பழகி வருகிறார்கள்.சாதியில்லை, சாமியில்லை என்று சொல்லி ஊர் சுத்தும் ஆறு நண்பர்கள்.
இப்படத்தில் தந்தையும் மகனும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி சமத்துவம் சகோதரத்துவம் என ஊரை மாற்ற நினைக்கிறார்கள்.
அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.
பெரியார் வலியுறுத்திய சாதி மதங்களைக் கடந்த தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் ஜாதி வெறி, அரசியல் நடத்துபவர்களின் கொட்டம் அடங்கும், சமூகத்தில் அமைதி நிலவும் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
0 Comments