ஜெய் பீம் திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ளார். இவருடன் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம், இளவரசு, எம்.எஸ் பாஸ்கர், ராவ் ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘‘சட்டம் ஒரு வலிமையான ஆயுதம், யாரை காப்பாத்துறதுக்காக அதை
பயன்படுத்துறோம்கிறது முக்கியம்’’, ‘‘திருட்டுக்கும், சாதிக்கும் என்ன
தொடர்பு? எல்லா சாதியிலயும் திருடங்க இருக்காங்க’’,
‘‘பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைச்சா, அன்னிக்கு நிம்மதியா
தூங்குவேன். அதுதான் எனக்கு பீஸ்’’ என எளிய வசனங்கள் மூலம் சந்துரு
கதாபாத்திரம் நம்மை ஆக்கிரமித்துகொள்கிறது.
நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் போலீஸாரில் பலர், வழக்குவிசாரணை என்கிற பெயரில் குரலற்ற எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் மனித உரிமை மீறல்களை,அதனால் சிதையும் குரலற்றவர்களின் குரலை நம் உள்ளங்களில் ஒலிக்கவைக்கிறது ‘ஜெய்பீம்’.
0 Comments