ENNA SOLLA POGIRAI(TAMIL)MOVIE REVIEW


தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அஸ்வின். இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.

ஹரிகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி, அவந்திகா மிஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் புகழ் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


RJ ஆக பணியாற்றும் அஸ்வினுக்கு தனக்கு மனைவியாக வருபவரிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளது. இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். அவந்திகா எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தனது கணவருக்கு ஒரு காதல் கதை இருக்க வேண்டும் என ஆசை இருக்கிறது.

இதனால் அஸ்வின் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி தேஜ் அஸ்வினி தான் என கூறி விடுகிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினுக்கு தேஜ் அஸ்வினி மீதே காதல் வந்து விட அதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.



Post a Comment

0 Comments