புஷ்பா படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் (Director Sukumar) இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக... மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகாவும் ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக இறங்கி நடித்துள்ளார். கவர்ச்சிக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார் என்பது இந்த படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் லிரிக்கல் பாடல்கள் மூலமே தெரிந்தது.
பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் பிரமாண்டமாக வெளியாகிருக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து, இதுவரை வெளியான அனைத்து பாடல்களுக்கும் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சமீபத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலான 'ஓ சொல்றியா மாமா' பாடல் சில விமர்சனங்களை பெற்றாலும், ரசிக்க வைத்துள்ளது.
0 Comments