மீசையை முறுக்கு படத்தைத் தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படம் பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளதாக படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி, மாதுரி, ஆதித்யா கதிர், ஃப்ராங்க்ஸ்டர் ராகுல், இளங்கோ குமணன், விஜய் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காலையிலேயே ஸ்பெஷல் ஷோ ரோகிணி திரையரங்கில் திரையிட ரசிகர்களுடன் படத்தை பார்த்து சந்தோஷப்பட்ட ஆதி தியேட்டரையே இசை கச்சேரி கூடமாக மாற்றி உள்ளார்.
காஞ்சிபுரத்தில் ஒரு நெசவாளர் குடும்பம். வாழ்ந்து கெட்ட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிவகுமார் (ஆதி) ஊருக்குள் அடிதடியென சுற்றிக்கொண்டிருப்பதால், அவனுடைய சித்தப்பா முருகனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஆனால், அங்கே சென்ற பிறகுதான், சித்தப்பா முருகன், ஒரு பெரிய ஜவுளி அதிபரின் வீட்டில், வீட்டோடு மாப்பிள்ளையாக மரியாதையே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்பது தெரிகிறது. இதற்குள் அந்த வீட்டைச் சேர்ந்த ஸ்ருதியுடன் (மாதுரி) காதல் ஏற்படுகிறது.
இது பிரச்னையாகி விட, முருகன், சிவகுமார் ஆகிய இருவருமே வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள். ஏற்கெனவே சிவக்குமாரின் தாத்தாவுக்கும் (இளங்கோ குமணன்) அந்த ஜவுளிக்கடை அதிபருக்கும் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்ருதி - சிவகுமாரின் காதல் நிறைவேறியதா, முருகன் தன் மாமனாரின் வீட்டிற்குத் திரும்பினாரா என்பது மீதிக் கதை.
மேலும், நெசவு துறையை மையப்படுத்திய காட்சிகளுக்கு பலத்த கைதட்டல்கள் கிடைத்து வருகின்றன.
ஹிப் ஹாப் தமிழா ஆதி சிவகுமாரின் சபதம் படத்தில் 2K கிட்ஸ்களை டார்கெட் பண்ணி படம் எடுத்துள்ளார் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் குடும்ப உறவுகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments