இன்று சுல்தான் திரைப்படம் சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமா திரையரங்கில், அதிகாலை முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் தனது ரசிகர்களுடன் திரைப்படத்தை காண அதிகாலையிலேயேவருகை தந்துள்ளார்.
பிறக்கும் போதே தாய் இறந்து போக, முரட்டுத்தனமான ரவுடி அடியாட்களால் வளர்க்கப்படுகிறார் சுல்தான் (கார்த்தி). சுல்தானின் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்பட, அவரோ, ஒரு கட்டத்தில் அடியாட்கள் கையில் இருந்த கத்தியை முற்றிலும் களைய நினைக்கிறார்.
அதே நேரத்தில் விவசாயம் செய்ய முடியாமல் கார்ப்பரேட்களால் தவித்து கொண்டிருக்கும் ஊர் பிரச்சனையையும் கையில் எடுக்கிறார். இறுதியில் இவை இரண்டும் என்னவானது என்பதே சுல்தானின் மீதிக்கதை.வழக்கம் போல அவருக்கு எளிதாக வரும் ஹியூமர் ஏரியாவிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.
ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக அழகில் குளிர்ச்சி காட்டுகிறார். நடிப்பிலும் கூட அதே துருதுறுப்பை காட்டி ரசிக்க வைக்கிறார். யோகிபாபுவின் கவுண்டர்கள் பல இடங்களில் க்ளாப்ஸ்க்கு கை கொடுக்கின்றன. பின்னணி இசையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் மெருகேற்றுகிறார் யுவன் ஷங்கர் ராஜா.






0 Comments