MASTER (TAMIL) MOVIE REVIEW
நடிகர்கள்: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ்
இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்
XB Film Creators தயாரித்துள்ள இத்திரைப்படம் இன்று நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காலேஜ் ப்ரொபஃசராக வரும் தளபதி மாணவர்களுக்கு மிகவும் பிடித்தாலும் அதிகமாக மது அருந்துவதால் மற்ற அதிகாரிகளால் வெறுக்கப்பட்டு சில காரணங்களால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வாத்தியாக செல்கிறார்.
அங்கு நடக்கும் தவறுகளை கண்டபின் அவர் எடுக்கும் அதிரடி ரெய்டுகளினால் வில்லன் கூட்டத்திடம் சிக்கிய சிறுவர்களை எப்படி மாஸ்டர் மீட்கிறார்.? என்பதே மீதிக்கதை.
ரசிகர்களுக்கான மாஸையும் விடாமல் க்ளாஸ் ஸ்டைல் காட்டி மாஸ்டர் ஸ்ட்ரோக் கொடுக்கிறார்.
ஹீரோவுக்கு இணையான ரோல் வில்லன் விஜய் சேதுபதிக்கு. தனது அலட்டலான நடிப்பாலும் நக்கலான பேச்சாலும் கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்து அசத்துகிறார். அர்ஜுன் தாஸும் தனது கதாபாத்திரத்தில் உயிர்ப்புடன் நடித்து கவனிக்க வைக்கிறார்.மாளவிகா மோகனன், அண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன், தீனா, பூவையார் என எல்லோரின் பங்கும் கச்சிதமாக வேலை செய்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ராவான சினிமாவையும் விடாமல் பக்கா ஹீரோயிக் படமாக மாஸ்டரை இயக்கியதில் வெற்றி பெறுகிறார். சிறுவர் சீர்திருத்த பள்ளி காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி ரசிகர்களுக்கும் விருந்து வைத்ததில் லோகேஷூக்கு சபாஷ்.
மூன்று மணி நேரத்திற்கு நெருங்கிய நீளமும் ப்ரீ க்ளைமாக்ஸ் காட்சியும் கதையின் ஓட்டத்தில் ஸ்பீட் பிரேக்கர் போடுகிறது. சில காட்சிகள் பரபரப்பாக நகர்ந்து கவனிக்க முடியாத நிதானத்தில் செல்வது மைனஸ்.

0 Comments