Oru Pakka Kathai (Tamil) Movie Review

 

ORU PAKKA KATHAI (TAMIL) MOVIE REVIEW 





பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒரு பக்க கதை. இத்திரைப்படத்தை வாசன் விஸ்வல் வென்ட்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையமைத்துள்ளார்.

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் சரவணனுக்கும் (காளிதாஸ்) - மீராவுக்கும் (மேகா ஆகாஷ்) காதல் ஏற்பட்டது. பையன் ஒரு நல்ல நிலைக்கு வரட்டும் என இரு வீட்டு பெற்றோரும் காத்திருக்க, இதற்கிடையில் இவர்களின் காதல் கதை, மீரா கர்பமான கதையாக மாறி, இருவருக்கும் உடனே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான சூழலில் ஒரு விசித்திரமான உண்மை அனைவருக்கும் தெரிய வர, அதை தொடர்ந்து வந்த பிரச்சனைகள் என்ன..? இந்த இரண்டு இளம் காதலர்களும், குடும்பங்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.? என்பதை நல்ல செய்தியோடு கூறியிருப்பதே ஒரு பக்க கதையின் மீதிக்கதை.

அதீத மூடநம்பிக்கையும் கூட ஆபத்தே என்ற அவசியமான கருத்தை ஒரு வித்தியாசமான காதல் கதையில் சொல்லப்பட்டுள்ளது.

 

Post a Comment

0 Comments