ANDHAGHAARAM (TAMIL) MOVIE REVIEW
ஏ ஃபார் ஆப்பிள் என்ற இயக்குநர் அட்லியின் நிறுவனம் தயாரித்துள்ள 'அந்தகாரம்' திரைப்படம் அறிமுக இயக்குநர்
வி.விக்னராஜனால் இயக்கப்பட்டுள்ளது இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன்,
பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர். பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக
நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி போன்ற வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்தகாரம்
என்றால் இருள், ஒளி இல்லாதது என்று பொருள். ஆனால் விக்னராஜனின் படத்தில், அது பல பரிமாண
அர்த்தங்களைப் பெறுகிறது.
அந்தகாரம் மிகவும் சுவாரஸ்யமான குறிப்பில் தொடங்குகிறது. கண் பார்வை இல்லாமல் இறந்து போன ஆன்மாக்களுடன் பேசும் திறன் பெற்ற வினோத் கிஷன், தன்னை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்து மனச்சோர்வினால் சிக்கி தவிக்கும் அர்ஜுன் தாஸ், கோமாவில் இருந்து மீண்டு வந்த மனநல மருத்துவர் குமார் நடராஜன். இம்மூவருக்கும் இருக்கும் தொடர்பு என்ன..? அது எப்படி அவர்களை இணைக்கிறது..? என்பதை இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையே ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக சொல்ல முயற்சித்திருக்கும் கதையே அந்தகாரம்.

0 Comments