வக்கிர எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் சூறையாடப்படும் பெண்களை எந்த எல்லைக்கும் சென்று மீட்பதே 'எதற்கும் துணிந்தவன்'.
உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் முக்கியப் புள்ளி போர்வையில் வலம்வரும் வினய் தனது இச்சைக்காக ஒரு கேங்கை ஏற்படுத்தி, பல தவறான செயல்களைச் செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அவர்களின் தவறுகளைக் கண்டுபிடிக்கும் சூர்யா, தனக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மத்தியில் எப்படி வில்லனின் நிஜ முகத்தை தோலுரித்துக் காண்பிக்கிறார், அதற்காக எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கிறார், அந்த கேங்கை என்ன செய்கிறார், இதற்கு அவர்களின் குடும்பம் எப்படி உதவுகிறது, பாதிக்கிறது என்பதுதான் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் திரைக்கதை.
காமெடி, எமோஷன், ரௌத்திரம் என எல்லாமே சரியான மீட்டரில் எகிறியிருக்கின்றன. கண்ணபிரானின் காதலி ஆதினியாக பிரியங்கா மோகன். பாடல்கள், காமெடி தவிர இரண்டாம் பாதியில் எமோஷனாலாகவும் ஸ்கோப் இருக்கும் பாத்திரம்.மிகவும் சென்ஸிட்டாவான விஷயங்கள் குறித்துப் பேச வேண்டிய காட்சியில் பிரியங்காவின் நடிப்பு, சிறப்பு!
மிகவும் சென்ஸிட்டாவான விஷயங்கள் குறித்துப் பேச வேண்டிய காட்சியில் பிரியங்காவின் நடிப்பு, சிறப்பு!
பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. ரத்தினவேலு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
0 Comments