MUDHAL NEE MUDIVUM NEE (TAMIL) MOVIE REVIEW


மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஒப்பற்ற விசயங்களின் ஒன்று நினைவுகளை அசைப்போடுவது. எல்லோருக்கும் நமது பதின்பருவ நாள்களை அசைபோட்டுப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. அப்படியாக 90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்து சினிமாவாக்கியிருக்கிறார் தர்புகா சிவா.

வினோத் (கிஷன் தாஸ்), சைனீஸ் (ஹரீஷ்), சுரேந்தர் (கவுதம் ராஜ்), துரை (சரண் குமார்) நால்வரும் 80களில் பிறந்து 90களில் வளரும் பதின்பருவ பள்ளி மாணவர்கள். 

வினோத்தும் அவரோடு பள்ளியில் படிக்கும் ரேகாவும் (மீதா ரகுநாத்) சிறு வயது முதலே காதலித்து வருகின்றனர். படிப்பை விட இசையில் அதிக நாட்டத்துடன் இருக்கும் வினோத்தின் கனவுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அவரது பிறந்தாளன்று ஒரு கிதாரை பரிசளிக்கிறார்.

நண்பர்கள், காதலி என்று தனது பதின்பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வினோத்தின் வாழ்க்கை அவருடன் படிக்கும் சக மாணவியான விக்டோரியா என்ற பெண்ணால் மாறுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதை  சொல்வதே  ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் கதையாகும்.

முதல் பாதி முழுக்க பார்வையாளர்களின் நினைவுகளைக் கிளறி ஜாலியாக செல்லும் படம் இரண்டாம் பாதியில்  தடம் மாறுகிறது. முதல் பாதியிலேயே இதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக பேசியிருந்தால் அந்த காட்சி பார்ப்பவர்களுக்கு இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் திடீரென வரும்போது வலிந்து அது திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சைப் பிழியும் ரகமாய் இருக்கும்.

பால்யகாலத்தில் நடந்த சின்ன காதல் முறிவு., ஒரே ஒரு வார்த்தையில் முடிந்து போயிருக்க வேண்டிய விசயம் அது. அம்முறிவு எப்படி பெரிய மன பாரத்தை அவர்களது மனதில் ஏற்றி விடுகிறது எனக் காட்டியிருக்கிறார்கள். வினோத்தாக நடித்திருக்கும் கிஷன் தாஸ்  மாணவ பருவத்திலும் சரி ஒரு குடும்பஸ்தனாக மாறிய பிறகும் சரி மிகவும் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


Post a Comment

0 Comments