KOORMAN (TAMIL) MOVIE REVIEW


உளவியல் ரீதியான படங்களைப் பார்க்க ஒரு சுவாரசியம் இருக்கும். மேலும் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.  இந்த கூர்மன் படத்தின் கதாநாயகன் " ஒரு மைன்ரீடர் " என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ப்ரயன் பி. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலா சரவணன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் " கூர்மன் ". 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ. சக்தி அரவிந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கிறது. மேலும் இப்படத்தை எம்கே என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜாஜி. போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவருக்கு, ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.

இவரின் திறமையை தனக்கு சாதகமாக்கி வருகிறார் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறார் ஆடுகளம் நரேன். அந்தக் குற்றவாளி ராஜாஜியின் பண்ணை வீட்டிலிருந்து தப்பிக்கிறார். இதனால் கோபமடையும் ஆடுகளம் நரேன், குற்றவாளியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ராஜாஜிக்கு கட்டளையிடுகிறார்.

இறுதியில் ராஜாஜி தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடித்தாரா, போலீஸ் வேலையில் இருந்து ராஜாஜி சஸ்பெண்ட் செய்ய என்ன காரணம்,  என்பதே படத்தின் மீதிக்கதை. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


Post a Comment

0 Comments