FIR (TAMIL) MOVIE REVIEW


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். 

விஷ்ணு விஷால் உடன் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், கௌதம் வாசுதேவ் மேனன் என இதில் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் விஷ்ணு விஷால் இர்ஃபான் அகமது என்ற கதாபாத்திரத்திலும், கவுதம் வாசுதேவ் மேனன் அஜய் திவான் என்ற கதாபாத்திரத்திலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆன ரைசா வில்சன் அனிஷா குரேஷி ஆகவும், ரேபா மோனிகா அர்ச்சனா வாகவும் நடித்துள்ளார்கள்.

அபூபக்கர் அப்துல்லா என்ற பெயரில் உலாவரும் பயங்கரவாதி ஒருவர் இலங்கையில் உள்ள தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் குண்டு வைத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துகிறார். இதனால் உளவுத்துறை இந்த அபூபக்கரை தேடி வர இவர்களிடம் எதிர்பாராத சிக்கிக் கொள்கிறார் முஸ்லிம் இனத்தைச் சார்ந்த விஷ்ணு விஷால்.

உளவுத்துறை இவர்தான் அந்த அபுபக்கர் அப்துல்லா என முடிவு செய்ய இந்த பிரச்சனையிலிருந்து விஷ்ணு விஷால் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

மத வெறி பிடித்த இந்த சமூகத்தில் மதரீதியான படத்தையும் அதில் உள்ள பிரச்சனைகளை  பற்றியும் படமாக்க ஒரு தனி தைரியமும் துணிச்சலும் வேண்டும். 

அப்படி ஒரு துணிச்சலோடு மற்ற இயக்குனர்களை போல் இல்லாமல் ப்பிரேம் பை ப்பிரேம் எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் காமெடியோடு சொல்ல வரும் கருத்தை மிக தெளிவாக படம் பார்பவர் மனதில் பதியும் வண்ணம் அழகிய வசனங்களை கொண்டு காட்சி படுத்தியுள்ளார் இயக்குநர்.

Post a Comment

0 Comments